கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1)
Kandupidithathu Eppadi?(part 1)
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.என். ஸ்ரீனிவாஸ்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :159
பதிப்பு :3
Published on :2009
ISBN :9788184760170
குறிச்சொற்கள் :விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்,
Out of StockAdd to Alert List
அறிவியல் முன்னேற்றம் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பிறகே மனித நாகரிகத்தில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால், 18ம் நூற்றாண்டு தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், இன்றைய நாகரிக வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத அளவில் உயர்ந்திருக்கிறது. ஏன்? எப்படி? என்ன செய்யமுடியும்? என்கிற கேள்விகளே கண்டுபிடிப்புகளுக்கான மூலகாரணம். சமுதாயத்தில் நோய் நொடியால் துவண்டு விழும் மனிதனின் கஷ்டங்களைக் கண்டு சகியாமல், அதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று செயலில் இறங்கிய அறிவியலாளர்கள் தகுந்த மருந்துகளைக் கண்டுபிடித்துத் தந்தார்கள். அறிவியலும் மருந்தியலும் இணைந்து தந்துள்ள கண்டுபிடிப்புகள் எண்ணிலடங்காதவை. இதற்காக அந்தக் கண்டுபிடிப்பாளர்கள் பட்டுள்ள சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல...
இந்த நூலில் அப்படி கண்டுபிடிப்பாளர்கள் பட்ட சிரமங்களையும், அவர்கள் ஆய்வில் ஈடுபட்டபோது நிகழ்ந்த அற்புதங்களையும், எப்படி அந்தக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன என்பது பற்றிய தகவல்களையும் சுவைபடக் கூறியுள்ளார் நூலாசிரியர் கே.என்.ஸ்ரீனிவாஸ். மருத்துவம் மற்றும் அணுவியல் பற்றிய கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கைக் கதைகளும், அவர்கள் கண்டுபிடிப்புகளுக்காக பட்ட சிரமங்களும் இந்நூலில் அழகுறத் தரப்பட்டுள்ளன. மருத்துவ உபகரணங்கள், தடுப்பு மருந்துகள், மருத்துவத் துறைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் கருவிகள், அணுக்கள் குறித்த கண்டுபிடிப்புகள், அணுக்கொள்கைகளை வரையறுத்தவர்கள் என இந்தத் துறைகளில் பெயர்பெற்ற அறிவியல் அறிஞர்களின் கதைகளைப் படிக்கும் மாணவர்கள் நிச்சயம் அறிவியல் அறிவோடு தாங்களும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பெறுவார்கள். வெறும் அறிவியல் செய்திகளோடு மட்டுமல்லாமல், இந்தக் கண்டுபிடிப்புகளின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்த தகவல்களும் இதில் உள்ளன. மருத்துவ உலகுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் எக்ஸ்&ரே கண்டுபிடித்த ராண்ட்ஜன், எதிர்பாராத விதமாகக் கண்டறிந்த அந்தக் கதிர்களுக்கு பெயர் வைக்க முடியாமல் அநாமதேயப் பெயராக எக்ஸ் என்று கொடுத்ததும், அவருடைய மனைவியின் கைவிரல் மோதிரம் எக்ஸ்&ரே ஃபிலிமில் பதிவான விதத்தையும் நூலாசிரியர் காட்டியிருக்கும் பாங்கு சுவையானது.