book

யாஹூ காலம்

Yahoo Kalam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.எஸ். ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685061
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிரிப்பு, சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

ஆயுதபூஜைக்கு ஐபிஎம் கம்ப்யூட்டரைத் துடைத்து சந்தனம் வைத்து, அதன் மீதொரு குங்குமப்பொட்டும் வைக்காத அன்னைத் தமிழர்கள் எத்தனை பேர்? மௌஸின் முதுகில் உள்ளங்கையளவு மல்லிகைப்பூ சாத்துவது கொஞ்சம் ஓவரே என்றாலும் செய்ய ஆள் இருக்கவேசெய்கிறார்கள்.

டெஸ்க்டாப்பில் குமரக் கோட்டம் கந்தப் பெருமான் கனகவேலோடு அருள்பாலிப்பார். என்னதான் ஆன்ட்டிவைரஸ் சாப்ஃட்வேர் போட்டிருந்தாலும் காக்க காக்க கனகவேல் காக்க என்று அந்தராத்மா அலறாமல் இராது. சாமி முதலில். சாஃப்ட்வேர் அப்புறம்.

விஞ்ஞானத்தோடு மெய்ஞானகம் பிரிக்கவே முடியாமல் பின்னிப் பிணைந்துவிட்ட ராகு.. ம்ஹூம், யாஹூ காலம் இது! இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் மாடர்ன் உலகில் நாம் செய்யும் அசட்டுத்தனங்களை அச்சு அசலாக வெளிப்படுத்துகின்றன. படிக்கப் படிக்கக் கோபமல்ல, குபீர் சிரிப்பு உத்தரவாதம்.

ஜே.எஸ். ராகவனின் ஐந்தாவது நகைச்சுவைத் தொகுப்பு இது. வழக்கம்போல் ரிகேஸ்ட்ரோ எண்டாலரிஸ்டுகளுக்கு வாழ்வளிக்கப்போகிற புத்தகம்!