CMM: ஃபைவ் ஸ்டார் தரம்
CMM: Five Star Tharam
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183687829
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to CartCapability நம்மிடம் இருக்கும் திறமை, தகுதி. Maturity நாம் இதுவரை பெற்றுள்ள அனுபவ முதிர்ச்சி. Model இவற்றை நமது வளர்ச்சிக்காக எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான சில வழிமுறைகள். சுருக்கமாக CMMஐ இப்படி விளக்கலாம். உலக அளவில் "CMM5" என்ற நிலையை எட்டிப்பிடித்த நிறுவனங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பது நாம் எல்லோரும் பெருமையாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளவேண்டிய விஷயம். ஆகவேதான், சர்வதேச சாஃப்ட்வேர் அரங்கில் நம் நாட்டுக்குத் தனி மவுசு.
இந்திய நிறுவனங்கள் என்றால், சிறந்த "CMM" தரத்தில் செயல்படுவார்கள் என்று கேள்வி கேட்காமல் நம்புகிறார்கள்.
சாஃப்ட்வேர் நிறுவனங்களில் மட்டுமல்ல, மற்ற எல்லா நிறுவனங்களுக்கும் CMM வழிமுறைகள் பொருந்தும். எப்படித் தரையிலிருந்து ஐந்தாவது உச்ச படிக்குத் தாவுவது? அதற்கு ஒரு நிறுவனம் எப்படித் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்? நிறுவனத்தின் ஊழியர்கள் எப்படித் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? CMMன் ஒவ்வொரு படியும் ஒரு அலிபாபா குகை. ஒவ்வொரு படியிலும் தெரிந்துகொள்ள ஜீபூம்பா மந்திரங்கள் சில இருக்கின்றன. தெரிந்துகொண்டுவிட்டால் உச்ச நட்சத்திரம் நீங்கள்தான். உலக மதிப்பு உங்கள் நிறுவனத்துக்குத்தான்.