உன்னைக் கண்டதே வரமல்லவா
Unnai Kandathe Varamallava
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2012
Add to Cartபனியின் குளிர்ச்சியான தாலாட்டில்... அரவணைப்பில்.... நீண்ட நேரம் தூங்கிவிட்டானோ என்னவோ... திடுக்கிட்டு எழுந்து... நீராடி... புத்தாடை புனைந்து... பூமிக்காதலியைக் காணப்போகும் சந்தோசத்தில் துள்ளல் நடைபோட்டான், இளம் ஆதவன்!
பனி மூடிய கம்பீரமான உயர்ந்த மலைகளும்... சிகரங்களும்... நெஞ்சை உறைய வைக்கும் நகரும் பனிக்கட்டிகளும்... பேரிரைச்சலுடன் பாய்ந்து ஓடிவரும் நதிகளும்.... சலசலத்து ஓடும் சிற்றாறுகளும்.... நீர் தேங்கிய குளங்களும், குட்டைகளும்... வண்ணப் பூக்களைக் கொண்ட மைதானங்களும்... தேயிலைத் தோட்டக்களும்... காபித் தோட்டங்களும்... பைன், தேவதாரு, யூக்கலிப்டஸ் என்று கணக்கே இல்லாமல் உயர உயரமாய் வளர்ந்த மரங்களும் என ஹிமாச்சலப் பிரதேசம் அந்தக் காலை வேளையில் மிக மிக ரம்யமாய், அழகாய்க் காட்சியளித்தது!