உன்னையே கை பிடிப்பேன்
Unnaiye Kai Pidippen
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயாலயன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2012
Add to Cartமுருகா...! நாளைப் பொழுது நல்ல பொழுதா விடியணும்...! என்று வேண்டிக் கொண்டாள் குணவதி.
படுக்கை அறையின் ஒளி மெல்லிய வெளிச்சத்தில் கவர்க் கடிகாரம் பார்த்தாள். விடிகாலை மணி மூன்று. குணவதி அருகே பாயில் படுத்திருந்தாள் சுபத்ரா, மூத்த மகள், மாநிறம் இருந்தாலும் லட்சணமாய் இருந்தாள்.
அமைதியாகப் பேசுவாள், எல்லோரிடமும் அன்பாய் இருப்பாய். பொறுமை காப்பது இவள் குணம்.
முதுநிலை பட்டப்படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை பார்க்கிறாள். மாதம் ஏழாயிரம் சம்பளம் வாங்குகிறாள்.
அடுத்த அறையில்,
கட்டில் மெத்தையில் படுத்திருப்பவள் வினித்ரா இளைய மகள். சுபத்ராவுக்கு நேர் எதிர்.