காகிதப் பூக்கள்
Kaakidha Pookkal
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லதா சரவணன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
Add to Cart'' புரிந்து கொள்ளப்படாதவர்களின் புரட்டப்படாத
பக்கங்களில் இருந்து ரத்தத்தால்
வரையப்பட்ட எழுத்தோவியம் இது...!''
சென்னையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு அருகில் உள்ளது கூவாகம் எனும் ஊர். சித்ரா பௌர்ணமி அன்று உலக கவனத்தையெல்லாம் தன்பால் ஈர்க்கும் கூவாகம் அர்ஜூனனின்
மகனான அரவான் என்பவர்தான் இங்கு
கூத்தாண்டவராக எழுந்தருளி தன்னை மானசீக
கணவனாக வணங்கும் அரவாணிகளுக்கு அருள்
பாலித்து வருகிறார்.
அன்று வந்த கடிதங்களைப் படித்து அதற்குப் பதில் குறிப்புகள் தயார் செய்து கொண்டு இருந்தான் கவின். ஆபீஸில் ஏறத்தாழ எல்லோரும் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அவன் கைபேசி அழைத்தது. டிஸ்பிளேயில் மனைவி வித்யாவின் புன்னகை ததும்பும் முகம். கவினும் வித்யாவும் காதல் மணம் புரிந்தவர்கள், அளவில்லாத சொத்து சுகம் இத்தனை இருந்தும் மணமாகி ஐந்து வருடங்களாய் குழந்தை இல்லை. வேண்டாத கோயில்களும் ஏறாத மருத்துவமனைகளும் இல்லை.! கடைசியில் கடவுளின் அருளோ, அல்லது மருந்துகளின் உபயோகமோ அழகான ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள் வித்யா!