சித்திரம் பேசுதடி
Chiththiram Pesudhadi
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லட்சுமிரமணன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
Add to Cartதற்செயலாக வானத்திலிருந்து இறங்கி வந்த நிலவு எதிரே நின்றால் எப்படி இருக்கும்? ஆஷா அப்படித்தான் இருப்பாள் பார்பதற்கு.
அலை பாயும் அழகிய கண்களில் ததும்பும் ஜீவத் துடிப்பு. எப்போதும் எதிலாவது தன் கவனத்தைப் பதிய வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் சுறுசுறுப்பு. அவள் இருக்கிற இடங்களில் இயல்பாகவே ஒரு கலகலப்பும், பிரகாசமும் ஏற்பட்டுவிடும்.
ஆஷாவின் தந்தை கைலாசம் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகித்தார். அதன் அலுவலக் நெரிசலான கடை வீதிப் பகுதியில் இருந்தது.
அவர்கள் வசித்தது உதய்ப்பூரின் முழு வசீகரத்தையும் பிரதிபலிக்கும் இடம். சற்றே உயர்வான மலை மேட்டுப் பிரதேசத்தில் அழகிய பங்களா. அதைச் சுற்றிப் பரவலான பூந்தோட்டம்.