book

நிலவு சுடுவதில்லை

Nilavu Suduvadhillai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புதுவை தேவி சங்கரி
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இருள் சூழ்ந்த சாலை. விளக்கு வெளிச்சம் மட்டுமே வீதிகளில் நிறைந்திருந்தது. நடமாட்டமும் குறைந்திருந்தது. மரங்கள் அடர்ந்த சாலைக்குள் கார் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. தினகர் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்... முகம் பாறையாய் இறுகிக் கிடக்க, நினைவுகள் பின்னோக்கிச் சுழல், கார் ஓடிக் கொண்டிருந்தது. வீடு வந்துவிட்டதை உணர்ந்தவன் காரை நிற்குமிடத்தில் விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்... நுழையும் போதே கண்ணில் பட்டது தாயின் கவலை தோய்ந்த முகமும். தந்தையின்  ஓய்ந்து போன தோற்றமும். சட்டென முகம் இறுகத் தன்னறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான்.