book

நீயிருந்தும் நானில்லை

Neeyirundhum Naanillai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயாலயன்
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

விடியற்காலை கண் விழித்ததும் வழக்கம் போல் முருகனின் திரு உருவப் படத்தைப் பார்த்தாள் விபீஷா. '' முருகா....! எல்லாரும் நல்லா இருக்கணும்! எல்லாம் நல்லபடியா நடக்கணும்...!  படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். அருகில் படுத்திருந்த கணவனைப் பார்த்தாள்.  போர்வைக்குள் ஒரு குழந்தையைப் போல் சுருண்டு படுத்திருந்தான் பூபேஷ்குமார். அவன் உச்சி முடியைக் கோதி.... நெற்றியில் இதமாய் முத்தமிட்டாள். பட்டென்று அவள் கையைப் பிடித்தான்.
கையை உதறிக் கட்டிலை விட்டுக் கீழே இறங்கினாள் விபீஷா. ''விபீ..! இன்னுப் கொஞ்சம் நேரம் படேன்....''
 இதழ்கள் கலையாமல் சிரித்தாள்.
 ''எதுக்கு''?
'' உம் புருஷன் மனசுக்கு கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுக்கலாம், இல்லையா?''