book

மனம் திரும்புதே

Manam Thirumbudhe

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. எஸ். இளமதி
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கேசவன் வயது  ஐம்பத்தைந்து. அழகான  தோற்றம் நல்ல சிவப்பு. நல்ல உயரம் இனிமையான குரல் வளம், அரசு அலுவலத்திலே நல்ல உயர்ந்த பதவியில் இருக்கும் பணி. நல்ல உயரம் காதுகள் சற்றே அவரைக்காய் போல அகன்றிருக்கும்.  முகத்தில் ஒரு தேஜஸ். அதற்குக் காரணம் கேசவனின் இடையறாத உடற்பயிற்சி. உடற்பயிற்சிலே அவர் ஒரு வகையில் கில்லாடி. அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வார்.  மாலையில் அரை மணி நேரம் மீண்டும் உடற்பயிற்சி செய்வார்.  உடற்பயிற்சிகளை  செய்த காலத்திற்கு  அவர் யோகக் கலையை செய்திருந்தார் என்றால் எவ்வளவோ பக்குவப் பட்டிருப்பார். ஆனால் உடற்பயிற்சியில்தான் அதிக கவனம் செலுத்தினார். காரணம் தனது உடலை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும். கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆண் மகன் தன்னுடைய உடல் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு ஒரு உட்காரணம் இருக்கும். கேசவனுக்கு அந்த உட்பொருள் நிறைய இருந்தது ஆகையனால் உடற்பயிற்சிக்கு  நிறைய நேரத்தைச் செலவழித்தார். எத்தனையோ பேர் அவருக்கு யோகாசனக் கலையைப் பற்றிச் சொன்னார்கள்.