book

முதல் பூக்கள்

Mudhal Pookkal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா கல்யாணி
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :236
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

எழுதிய கவிதையின் வரிகளை மறுபடியும் ஒருமுறை படித்துப் பார்த்தான் தியாகு. மனதில் மகிழ்ச்சிப் பூவின் நறுமணம்!  '' நன்றாகவே வந்திருக்கிறது.  ஆனால் ஒரு நெருடல் இருக்கிறாற்போல் தெரிகிறதே!'' என்று மெல்லக் கூறிக் கொண்டான். மறுபடியும் நிதானமாக வாசிக்கலானான். சரி செய்து விடுகிற முனைப்புடன். வேறு வேறு வார்த்தைகளைத் தேடினான் ஒப்பனை செய்வதற்காக. உடனே கிடைக்கும் போல் தோன்றவில்லை. கொஞ்சம் யோசிக்க வேண்டும். அதற்கு அவகாசம் தேவைப்படும் போல் தோன்றியது.