மகாயோகி அரவிந்தர்
Mahayogi Aravindhar
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.சு. ரமணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :111
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788184760590
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of StockAdd to Alert List
விடுதலைப் போராட்ட வீரராக இருந்து, ஆன்ம ஞானியாக உயர்ந்த மகாயோகியின் வாழ்க்கைச் சரிதம். வங்காளம் தந்த மகான்கள், வீரர்கள், இலக்கியவாதிகள் அனைவரின் ஒட்டுமொத்த உருவமாகத் தோன்றியவர் மகாயோகி அரவிந்தர். தந்தையின் விருப்பப்படி, ஆங்கிலப் பழக்க வழக்கங்களோடு, இங்கிலாந்தில் வளர்க்கப்பட்டவர். ஒரு கட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கரிய மேகங்கள் இவரையும் சூழ்ந்தபோது, ஆர்வமுடன் அதில் தன்னை கரைத்துக் கொண்டவர். அரசியல் தாகம் மிகுந்து, நாடு விடுதலை பெறவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடன் இந்தியாவில் கால் வைத்த அரவிந்தருக்கு, இறுதியில் ஆன்ம தாகம் மிகுந்து மனித வாழ்வின் விடுதலையைக் காணுகின்ற யோகம் கைவரப் பெற்றது ஆச்சரியமானது... மெத்தப் படித்தவர். சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். இரக்க குணம் கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். எழுத்தாளர். பத்திரிகையாளர். சுதந்திரப் போராட்ட வீரர்... இப்படி பல முகங்கள் அரவிந்தருக்கு உண்டு. ஆனால் இவற்றில் எதுவும் ஒட்டாத, சொல்லப் போனால் இந்த முகங்களுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டதாக விளங்குவது அவரது பிற்கால வாழ்வின் யோகத் திருமுகம். அரவிந்த கோஷாக அவரின் சிறை வாழ்க்கை, பின்னர் அவர் பாண்டிச்சேரிக்கு வந்தது, இங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் அவர் கொண்டிருந்த நட்பும் தொடர்பும், துன்பம் நிறைந்த வாழ்வை எதிர்கொண்ட விதம், பிரிட்டிஷாரின் உளவுப் பார்வையிலிருந்து தப்பித்தது, பின்னர் ஆன்மிக உலகில் நுழைந்து மகாயோகியாக உருப்பெற்றது, மகத்தான இலக்கியங்கள் படைத்தது, அன்னை மிரா பாண்டிச்சேரி ஆசிரமத்துக்கு வந்தது, ஆன்மிகப் பேரொளி பரப்பும் மகத்தான பணியில் இறங்கியது ... என மகாயோகி அரவிந்தரின் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் இந்நூலில் சுவைபடத் தரப்பட்டுள்ளன..