இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி பாகம் - 1
Indiayavin Musilim Aachi Part - 1
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சையித் இப்ராஹிம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஇந்நூலாசிரியர், கி.பி. 695ல் முஹம்மத் பின் காஸிம் என்பவர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தது முதல், கி.பி. 1859ல் கடைசி மன்னர் பஹதுர்ஷா ஆண்டது வரையிலான அனைத்து முஸ்லிம் மன்னர்களையும், அவர்களது ஆட்சி முறைகளையும் பற்றி இரண்டு நூல்களில் சுருக்கமாகத் தொகுத்துள்ளார். அரேபியால் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தியாவுடன் அந்நாட்டுக்கு இருந்த வியாபாரத் தொடர்பு தொடங்கி, அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த சைவ, வைணவ, புத்த, ஜைன, யூத, கிறிஸ்தவ மற்றும் பார்ஸி மதங்களுக்கு இடையே இருந்த போட்டிகள், ஆதிசங்கரரின் சைவ மதப் பிரசாரம் போன்றவையும் இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி இங்கு எப்படி வந்தது, அவர்களில் யார் யாருடைய ஆட்சி மக்களுக்கு நன்மையையும், தீமையையும் விளைவித்தன. இங்கே இஸ்லாம் பரவியதற்கும், இம்மன்ரகளுக்கும் சம்பந்தம் உண்டா? முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி முறையால் பல்வேறு துறைகளில் இந்தியா கண்ட வளர்ச்சி, இந்தியாவில் இஸ்லாம் பரவியது எப்படி, இஸ்லாமிய சூஃபி ஞானிகள் ஹிந்துக்களுடன் எப்படி ஒருங்கிணைந்து சென்றனர் என்று பல விவரங்களை தக்க சான்றுகளுடனும், புள்ளி விபரங்களுடனும் இந்நூலாசிரியர் இவ்விரு நூல்களிலும் பதிவு செய்துள்ளார். சிறந்த வரலாற்றுப் பெட்டகங்களில் இவையும் ஒன்று. -பரக்கத். நன்றி: துக்ளக், 29/1/2014.