உடலே உன்னை ஆராதிக்கிறேன்
Udalae Unnai Aarathikiraen
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.கே.வி. தேசிகாச்சார்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :15
Published on :2009
ISBN :9788189780746
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of StockAdd to Alert List
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' நடையைப் பார்த்துவிட்டு சென்னையின் ஜனத்தொகையில் ஒரு கணிசமான சதவிகிதம் என்னைத் துக்கம் விசாரித்துவிட்ட சூழ்நிலையில், சில நண்பர்கள் 'யோகா ட்ரை செய்து பாரேன்!' என்று யோசனை சொன்னார்கள்.
'இரவு பகல் என்பதெல்லாம் இல்லாமல் களேபரமாக அன்றாட வாழ்க்கையை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜர்னலிஸ்ட், கட்டுப்பாடாக யோகா செய்ய முடியுமா?' என்ற சந்தேகம் விசுவரூபம் எடுத்தாலும், முழங்கால் வலி 'முயற்சி செய்' என்று ஆணையிட்டது. 'கிருஷ்ணமாச்சாரியார் யோக மந்திரம்' சென்று தேசிகாச்சாரைச் சந்தித்தது அப்போதுதான்!
ஒரே வாரத்தில், காலுக்கென்று சில எளிமையான யோகாசனங்கள் மூலம் அவர் என் வலியை போன இடம் தெரியாமல் துரத்தியது வேறு விஷயம்! அதேசமயம் அவர் நட்பு கிடைத்ததற்காக என் முழங்கால் வலிக்கு நான் நன்றி தெரிவிக்காமல் இருக்க முடியாது! அதற்குப் பிறகு ஓராண்டுக்கும் மேல் அவரிடம் யோகா கற்றுக்கொண்டேன். வைர விழா வெளியீடான ஜோக்ஸ் புத்தகத்துக்காக என்னுடைய ஆயிரக்கணக்கான ஜோக்குகளுடன் நாட்கணக்கில் மல்லாடியபோது முதுகுவலி வராமல் சமாளித்ததற்கும் அவர் சொல்லித் தந்த யோகாசனங்கள்தான் காரணமாக இருக்க வேண்டும்!
தேசிகாச்சார்! ஒரு முறை சந்தித்தால்கூட மறக்க முடியாத மனிதர் அவர். காலை, பிற்பகல், மாலை, இரவு நேரம், கடும் வெயில், குளிர்... இப்படிப் பல சூழ்நிலைகளில் அவரைச் சந்தித்திருக்கிறேன். 'டல்'லாக இருப்பது, மூட்_அவுட் ஆவது, கோபப்படுவது... இந்த எதுவுமே இவரிடம் கிடையாதா என்று வியந்திருக்கிறேன்.
சாமானியரோடு பேசிக்கொண்டிருந்தாலும் சரி, வி.ஐ.பி_யோடு இருந்தாலும் சரி _ எப்போதும் மாறாத புன்னகை, பொறுமை, சுறுசுறுப்பு, நிதானம்! வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ!
'இந்து' நாளிதழில் யோகா பற்றிச் சில வாரங்கள் அவர் எழுதிய கட்டுரைகள், வெளிநாடுகளில் அவர் பயணம் செய்தபோதெல்லாம் இந்தியா பற்றியும் யோகா பற்றியும் பல நாட்டு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் தந்த அற்புதமான பதில்கள், தெளிவான விளக்கங்கள்... இவற்றையெல்லாம் படித்தபோது, தேசிகாச்சாரை தமிழில் எழுத வைக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது. அதன் விளைவுதான் விகடனில் தொடராக வெளிவந்த 'உடலே உன்னை ஆராதிக்கிறேன்!' மிகச் சிறப்பாக அமைந்துவிட்ட அந்தத் தொடரைப் புத்தகமாக விகடன் பிரசுரிக்க முடிவெடுத்தபோது என் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது!