வாகீசமுனிவரின் ஞானாமிர்தம் சைவ சித்தாந்த திறவுகோல்
Moovalur Ramamirtham Ammaiyar
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் இராம. சிவசக்திவேலன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2007
Add to Cartசிவஞானபோதத்தை முதன்மை நூலாகக் கொள்வது மரபு. இதற்குப் பின் வந்த சிவஞானசித்தியார் அதன் விருத்தியுரையாகவும் சிறந்த ஆய்வு நூலாகவும் விளங்குகிறது. சுபக்கம், பரபக்கம் என இரு பகுதிகளாக அமைந்த இந்நூலின் முதற்பகுதிக்கு ஆறு அறிஞர்கள் எழுதிய உரை சிறந்ததாகக் கொள்ளப்பட்டு, அறுவர் உரை எனப் போற்றப்படுகிறது. அவர்களுள் ஒருவரான ஞானப்பிரகாசர் (17-ம் நூற்றாண்டு) யாழ்பாணத்து திருநெல்வேலியில் பிறந்தவர்.போர்த்துக்கேயர் ஆட்சியில், அவர்களின் கொடூரமான சைவநிந்தனையைச் சகிக்க முடியாதவராக இவர் தமிழ்நாடு சென்று, அங்கிருந்து வடக்கே போய் வடமொழியும் சாத்திரமும் பயின்றார். பின்னர் தமிழ்நாடு திரும்பி, திருவண்ணாமலை ஆதீனத்தில் சேர்ந்தார்.தமிழிலே சிவஞானசித்தியார் உரையும் வடமொழியிலே ஒன்பது நூல்களும் எழுதியவர் ஞானப்பிரகாசர். அவரின் சித்தியார் உரை அவர் காலத்திலும் பின்னரும் பெரும் புயலைக் கிளப்பியது. சிவஞான சித்தியாரிலே சிவசமவாதக் கொள்கையைக் காண முனைந்துள்ளார் என்று பின்னால் வந்த சிவஞானசுவாமிகளால்