book

மஞ்சணத்தி

Manjsanaththi

₹237.5₹250 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழச்சி தங்கபாண்டியன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380072395
Add to Cart

பகுத்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, நகர வாழ்க்கை குடியிருப்புகளின் இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் "மஞ்சணத்தி மரம்என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை, அனைத்துக்கும் சிகரமாக உள்ளது. ஒரு பெண், தான் பருவமடைந்த செய்தியை, முதல் முதலில் தன் தாயிடம் கூட கூறாமல், மஞ்சணத்தி மரத்திடம் கூறுவதாக எழுதப்பட்டுள்ளது. \"மூச்சிறைக்க ஓடிவந்து என் முதல் ருதுவை உன் இலையொன்றை கிள்ளிடியபடியே தொடங்கிற்று என் பதின் பருவம்என்ற வரிகள் மிகவும் அழகானவை. கிராம வாழ்க்கையில் இயற்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை மிக நேர்த்தியாக கூறியிருப்பது அருமை.மழையும், மழைசார் வாழ்வும், வெயில் ருசி என்ற தலைப்புகளின் கீழ் 37 கவிதைகள் உள்ளன. இவை அனைத்துமே குட்டி, குட்டி கவிதைகளாக இருந்தாலும், மழையின் சாரலையும், வெயிலின் இதத்தையும் உணரவைக்க கூடியவை.. \"நாற்றம் என்ற தலைப்பில், யாரும் கவனிக்காத நேரத்தில் தெருவில் குப்பையை கொட்டுவது குறித்து எழுதப்பட்டுள்ள கவிதையை படித்து முடித்ததும், நம்மை அறியாமலே, மனதில் ஒரு வலி ஏற்படுகிறது.