ஸ்ரீ சக்ரம்
Sri Chakram
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீ கோவிந்தராஜன்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688406
குறிச்சொற்கள் :பூஜை, தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
Out of StockAdd to Alert List
உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன.
நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீ சக்கரம் பற்றிய 20 அரிய தகவல்களை அறிவோம்.
1. பண்டைக்காலத் தாந்ரீக தத்துவ போதனைப்படி, பழைய சடங்கு முறைகளை கடைப்பிடித்து ஒழுகுவதில் நம்பிக்கை கொண்ட மக்கள் இந்த சக்கரத்தை பயன்படுத்தி வந்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
2.தாந்ரீக பிரபஞ்சோற்பத்தி மட்டுமின்றி, மனோ தத்துவம், உடலின் ஒப்பற்ற தத்துவம் இவைகளின் கருத்துக்களை உருவகப்படுத்தும் சித்திரமாகவும் ஸ்ரீசக்கரம் சொல்லப்படுகிறது.
3. ஸ்ரீ சக்கரத்தின் சித்திரம் கி.மு. ஓராயிரம் ஆண்டு காலத்துக்கு முந்தியதாகும்.
4. ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம் மற்றும் சேஷாத்திரக் கணிதம் மட்டுமின்றி விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இத்துறைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். அப்போது தான் முழுமையான பலன் பெற முடியும்.
5.ஒருசமயம் அகிலாண்டேசுவரியான காமாட்சிதேவியின் சக்தியானது மிகவும் உக்கிரமாக இருந்தபோதும் சாந்தடையச் செய்ய வேறு வழி தெரியாமல், அம்பிகையின் எதிரில் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி ஆகர்சித்து பின்சாந்தமுறச் செய்தனர்.
6.ஒன்பது கட்டுகள்கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன.
7. ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித் தருகிறாள்.
8.சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி - வடிவமாக ஓம் என்பது தான் ஸ்ரீ சக்கரமானது.
9.சக்தி வழிபாட்டின் மிக முக்கியமான பரிகார தேவதை கள் 64 (அறுபத்து நான்கு யோகினிகள்). இது அன்னையிடம் இருந்து தோன்றிய அபரிதமான சக்திகளாகும். சஷ்டி என்றால் 6 (ஆறு) சதுர் என்றால் 4 (நான்கு) இவ்வாறாக 64 கோடி யோகினியரால் பூஜிக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த எண்ணிக்கை அறுபத்து நான்கை மையப்படுத்தி ஸ்ரீசக்கரத்தை வடிவமைத் தார் பூஜ்ய ஸ்ரீஆதிசங்கரர்.
10. மனிதன் தன்னை கட்டுப் படுத்தி சித்தபுருஷாக வளர்ந்து அன்னையின் அருளை உணரும் ஆன்மீக நிலையின் முடிவே, ஸ்ரீசக்கர தத்துவமாகும்.
11. ஸ்ரீசக்கரத்தின் மறுபெயரே, ஸ்ரீசக்கரராஜம் என்ற சிறப்பு பெயராக விளங்குகிறது.
12. சக்கரத்தின் கீழாக நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் (5), மேல் நோக்கிய முக்கோணங்கள் நான் கும் (4), சிவாத்மகம் என்பர்.
13. ஸ்ரீசக்கர பூஜை செய்யும் உபாசகன் (சாதகன்) லௌகீக சுகானுபவங்களை அடைவதோடு ஞானத்தை கடைபிடிப்பதின் மூலம் விருப்பு, வெறுப்பு, புலன்கள் இவற்றை வென்று மோட்ச சாம்ரா யத்தை அடைகிறான்.
14.சென்னையில் உள்ள திருவேற் காட்டு கரு மாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன், தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் ஆகிய மூவரையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் தரிசனம் செய்வது திரிசக்கர தரிசனம் என்று அழைக்கப்படும். ஆடி மாத பவுர்ணமியன்று இந்த தரி சனம் மிகவும் விசேஷமானது.
15.திருச்சிக்கு அருகே திருவானைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் தாடங்க வடிவில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. உக்கிரமாக இருந்த அம்பாளுக்கு ஸ்ரீசக்கரம் அணிவித்து சாந்தமாக்கியவர் ஆதி சங்கரர் என்று கூறப்படுகிறது.
16.நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். இது தவிர 51 கணேசர்கள், 9 கிரகங்கள், அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்கள், 7 யோகினிகள், 12 ராசிகள், 51 பீட தேவதைகள் என்று 157 தேவதைகளின் ரூபமாக அம் பிகை ஸ்ரீசக்கரத்தில் வழிபடப்படுகிறாள்.
17.ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவ மாகவும் செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
18.சவுந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், தேவி புஜங்கம், பவானி புஜங்கம், தேவிபாகவதம், திருமந்திரம் போன்ற நூல்கள் ஸ்ரீசக்கர வழிபாட்டை சிறப்பித்துக் கூறுகின்றன.
19.மாங்காட்டில் ஆதிசங்கரர் தன்னுடைய கரத்தா லேயே அர்த்த மேருவை பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த மேருவானது அஷ்ட கந்தங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் சந்தனம். அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிவாஜித், ஜடாமாஞ்சில், கச்சோலம் ஆகிய எட்டு விதமான நறுமணப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
20.சென்னையின் முக்கியப்பகுதியாக விளங்கும் பாரிமுனையில் தம்புச்செட்டித்தெருவில் உள்ளது புகழ் பெற்ற காளிகாம்பாள் ஆலயம். குபேரன் வழிபட்ட தலம். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் இங்குள்ளது.