உலகே பூச்செண்டு
Ulage Poochendu
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுவாதி
பதிப்பகம் :சூர்யா சக்தி பதிப்பகம்
Publisher :Surya sakthi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2011
Add to Cartபெண்கள் எப்போதும் கரடுமுரடான பாதைகளையே கடக்க வேண்டியிருக்கிறது. சமுதாயத்தில் சிறிய உயர்வோ, பெரிய உயர்வோ தன்னிலையில் இருந்து மேம்படும் பொழுது அவள் நடத்தை குறித்தான விமர்சனங்களும் எந்த தயவுதாட்சண்யமும் இன்றி அவள் மீது வீசப்பட்டு விடுகின்றன. எல்லாவற்றையும் தூசியாய் ஊதி விட்டு தன் போக்கில் போகிற மனப்பக்குவம் கொண்ட பெண்களும், இல்லையென்றால் அதைப் பற்றிய பிரக்ஞை இல்லாத பெண்களும்தான் வெற்றி பெறுகிறார்கள். யாருக்குமே வாழ்க்கை காயங்களைத் தராமல் களிப்புகளைத் தருவதில்லை. எவ்வளவு உயர்பதவியாய் இருந்தாலும் முதலில் சமுதாயம் தன் அழுக்கு நீரை ஊற்றி வரவேற்றபின்னர்தான் மஞ்சள் நீராட்டு விழா நடத்துகிறார்கள் சிறிய சலனங்களுடனும் கொஞ்சம் மறுதலிப்புகளுடனும் பல நிராகரிப்புகளுடனும்.