book

பாலருக்கான பாரதக் கதைகள்

Balarukaana Bharatha Kathaigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செவல்குளம் ஆச்சா
பதிப்பகம் :நிஜம்
Publisher :Nizham
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

அரண்மனையில் ஒரு நாள் தன் கணவனின் நண்பன் கர்ணனுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தாள். துரியோதனன் வருவதைப் பார்த்துவிட்டாள். எழுந்தாள் மரியாதை காரணமாக. தோற்றுப் போவதை உணர்ந்து எழுந்து போவதாக எடுத்துக் கொண்டான் கர்ணன்.துரியோதனன் வரும் திசையைப் பார்க்க இயலாத திசையில் அவன் இருந்தான். “எங்கே ஓடுகிறாய்?’’ என்றவாறு எட்டிப் பிடித்தான். அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலாபரணம் அறுந்து முத்துக்கள் சிதறிவிட்டன.அருகில் துரியோதனன் வந்துவிட்டான். இதனைக் கண்டுவிட்டான். கர்ணன் பயந்துவிட்டான்.கலகலவெனச் சிரித்துக்கொண்டே, இருவரையும் பார்த்த துரியோதனன், “எடுக்கவோ, கோக்கவோ’’ என்று கேட்டான்.தன் மனைவியை அவன் அறிவான். தன் நண்பனையும் அவன் அறிந்தவன். அதனால் அப்படிக் கேட்டான். பெருந்தன்மையானவன்.பிரிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்த மன்னனாகி விட்டவன் தர்மன். அசுவமேத யாகம் செய்து மாமன்னனாக முடிசூட்டப்பட்டவன். ஆனாலும், மகா சூதாடி, சூதாடுதல் சத்திரிய தர்மம். சூதாட அவனை அழைக்கவே சகுனியுடன் ஆடினான். அனைத்தையும் தோற்றான் தர்மன். நிபந்தனைப்படி வனவாசம், அஞ்ஞாத வாசம் தொடர்ந்தது.திருதராஷ்டிரனின் மக்களுக்கு மட்டிலா மகிழ்ச்சி. பாஞ்சாலியின் அடக்கமற்ற தன்மைக்கும் ஆணவத்திற்கும் ஆப்பு வைக்கப்பட்டதால் மகிழ்ச்சி.