கண்ணகி கோட்டம் (விழிகள்)
Kannagi Kottam (Vizhigal)
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் துளசி. இராமசாமி
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
Publisher :Puthaga poonga
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :138
பதிப்பு :1
Published on :2001
Add to Cartநகர்களில் ஆண்டலைக்கொடி ஏற்றினர் ;நெய்யோடு ஐயவி அப்பினர்; கொழுமலர் சிதறினர்; தம் வாயினின்று ஒலி எழாதவாறு வழிபட்டனர்; தம்முள் மாறுபட்ட நிறத்தை உடைய இரண்டு உடையை உடுத்தினர்; சிவந்த நூலைக் கையில் காப்பாகக் காட்டினர்; வெண்பொரி சிதறினர் ; கொழுவிய கிடாயினை வெட்டி அதன் குருதியோடு தூய வெள்ளரிசியைக் கலந்து பலியாக இட்டனர்; பல பிரப்பு இட்டனர் ; பசுமஞ்சளோடு மணப்பொருட்களைத் தெளித்தனர் ; செவ்வலரி மாலையையும் ,குளிர்ச்சி பொருந்திய பிற நறுமலர் மாலைகளையும் இணை ஒக்க அறுத்துத் தொங்க விட்டனர்; மலைப்புறத்து ஊர்களையெல்லாம் வாழ்த்தினர்; நறும்புகை காட்டினர்; குறிஞ்சிபாடினர்; பல இசைக்கருவிகளையும் முழங்கினர்; இறைப்பொருள் பற்றி முரண்பட்ட கருத்துடையோர் அஞ்சும் படியாக குறமகள் தன்மேல் முருகன் அருள் வந்து ஆடும் அகன்ற வழிபாட்டிடங்கள்; "முருகாற்றுப்படுத்த உருகெழு வியன்நகர்" என்று நக்கீரர் விளக்கியுள்ளார்.