book

எல்லாருக்கும் வணக்கம் நிமிர்ந்து நில் பாகம் 2

Ellaarukkum Vanakkam Nimirnthu Nil Part 2

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோபிநாத்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789385125119
Add to Cart

குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை.நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்றால், அதுதான் நினைத்தபடி இருக்க வேண்டும் என்று நினைப்பதும் நியாயம்தான். 

‘நான் விழுந்தாலும் எழுவேன்’ என்று நீங்கள் தீர்மானமாக நம்பினால் அடுத்தவர் என்ன சொன்னாலும் உங்கள் உறுதியை குலைக்க முடியாது. ஒன்றை அடைவதற்கான உரிமையையும் தகுதியையும் நமக்கு வேறு யாரும் தரவேண்டியதில்லை.

ஹெல்மெட்டையும் துப்பட்டாவையும் வைத்து உங்களுக்குத் தெரிவந்தவர்களை ஏமாற்றிவிடலாம். ஆனால் தெரியாத மனிதர்களால் ஆபத்து வருகிறதுபோது அவர்கள்தானே ஒடிவரவேண்டும்.

நம்முடைய பிள்ளைகளுக்கு நம்முடைய வேர்களை அடையாளப் படுத்த குறைந்த கால அவகாசத்திற்குள் நம்முடைய பண்பாடுகளை சொல்லித்தர, பொங்கல் நாட்களைப்போல் சிறந்த விடுமுறை நாட்கள் வேறொன்றும் இல்லை.

நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நம் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய ஒரு பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான் அதற்காக நாம் வெட்கப்படத் தேவையுமில்லை. அது அவசியமுமில்லை.