அவள் கைகளில் குத்தியிருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது
அந்தப் பட்சி, நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள்
மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும்
மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன.
சற்றுமுன் திரும்பிய அவளது கண்களில் ஒளிர்ந்த பறவையின் முறுவல் அசையாடிக்
கொண்டிருந்த புலனில், அவளைப் பற்றிய விபரீத உணர்வுகள் தனக்குள் அடரக்
காரணமென்ன என்று யோசித்தான். அவளது கைகளில் சுருண்ட பச்சைக் கொம்புகள்,
வட்டச் சமைவுகளாய்ப் புரண்டிருந்த அதன் ஈர்ப்பு விசை அவனைக் கொளுவியிழுத்த
சற்றைக்கெல்லாம் கண்டான். அவள் உடல்மீது எழுதியிருந்த புதிர்மொழியின்
கண்ணிகளில் தன் கால்கள் நுரைதள்ளிக் கொண்டிருப்பதையும், ஓயாமல் எழுதிச்
செல்லும் ஒற்றை இறகையும்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pachchai Paravai, பச்சைப் பறவை, கௌதம சித்தார்த்தன், Gouthama Siddharthan, Sirukathaigal, சிறுகதைகள் , Gouthama Siddharthan Sirukathaigal, கௌதம சித்தார்த்தன் சிறுகதைகள், எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Gouthama Siddharthan books, buy Ethir Veliyedu books online, buy Pachchai Paravai tamil book.