book

ஹாஸ்ய வியாசங்கள்

Hashya Vyashangal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பம்மல் சம்பந்த முதலியார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :54
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384915377
Add to Cart

தமிழ் நாடகத் தந்தை என்று அழைக்கப்படும் பம்மல் சம்பந்த முதலியார் 1873 பிப்ரவரி 1ஆம் தேதி சென்னையில் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் பிறந்தவர். வழக் கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிபதி யாகவும் இருந்துள்ளார். நாடகங்கள் என்றால் கூத்தாடிகள் தொழில் என்ற சமூகப் பார்வையை மாற்றியமைக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து 01.07.1891இல் ‘சுகுண விலாஸ் சபா’ என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார். சி.பி. ராமஸ்வாமி அய்யர், எஸ். சத்தியமூர்த்தி, ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் முதலிய அன்றைய சென்னைப் பிரமுகர்கள் இவரது நாடகங்களில் நடித்துள்ளனர். தனது 22ஆவது வயதில் தனது முதல் நாடகமான ‘லீலாவதி & சுலோசனா’வை அரங்ககேற்றினார். ஏறக்குறைய 94 நாடகங்கள் எழுதியுள்ளார். 1959இல் சங்கீத நாடக அகாதமி விருதும் 1963இல் பத்மபூஷண் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. தமிழ் நாடகத் துறையின் தனிப்பெரும் சக்தியாக விளங்கிய இவர் தனது 91ஆவது வயதில் (24.09.1964) மறைந்தார்.