அவள் பிரிவு
Aval Pirivu
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டோரதி கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384915681
Add to Cartசென்னை தியாகராய நகரில் எனக்கென்று சொந்தமாக ஒரு மனை அமைத்துக் கொண்டு குடி வந்த போது சுற்றுமுற்றும் ஒரே வேல மரங்கள், எங்கும் ஒரே சகதி, மாலைநேரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கிவிடும், என் வீடு ஒற்றைமரம் போல தனித்திருக்கும், தேய்பிறைக்காலங்களில் காரிருள் சூழ்ந்து கொண்டு எப்பேர்பட்டவரையும் பயம் கொள்ளச் செய்யும், அப்போது நான் நவசக்தி இதழில் வேலை செய்து கொண்டிருந்தேன், வீடு திரும்பி வருவதற்கு இரவு பதினோரு மணிக்கு மேலாகிவிடும், என் மனைவி மட்டும் வீட்டில் தனியே இருப்பாள், நான் வீட்டுக்கு வந்த்தும் உனக்கு பயமாக இல்லையா என்று கேட்பேன், அதற்கு அவள் எனக்கென்ன பயம், வானத்தில் விண்மீன்கள் விட்டுவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன, அதோ கிழக்கே மவுண்ட் ரோட் பக்கம் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன ரெயில்கள் போகும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது தோட்டப்பயிர் செய்கிறவர்கள் தங்கள் அலுவல்களை முடித்துக் கொண்டு களைப்பு தீரபாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் இப்பொழுது தான் போனார்கள் என்று கூறுவாள்,