book

செவ்விலக்கிய மீட்பர் சி.வை. தாமோதரம் பிள்ளை

Sevvilakiya Meetpar C.V.Damodharam Pillai

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. முனீஸ்மூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123432212
Add to Cart

பண்டைய சங்கத்தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்;து போகாது பாதுகாத்தவர். தனது அரிய தேடல் மூலம் அவற்றை மீட்டெடுத்து காத்து ஒப்பிட்டு பரிசோதித்த அச்சிட்டு வாழக்கூடிய பெருமைக்குரியவர். சி.வை. தாமோதரம் பிள்ளை. 1832 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ம் திகதி  வைரவநாதன் பெருந்தேதி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். யாழ்ப்பாணம் சிறுபிட்டியில் பிறந்தவர் சி.வை. தாமோதரம்பிள்ளை. தமிழில் அருமை பெருமையினை தமிழர்கள் உணர்ந்து. உயரவேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு இறுதிவரை வாழ்;ந்தவர். இவரின் தந்தை ஆசிரியராக இருந்ததன் காரணமாக தந்தையின் அறிவு வழிகாட்டல் அவரின் வளர்ச்சிக்கு துணை நின்றது. தாமோதரம்பிள்ளை 1844 ம் ஆண்டு முதல் 1852 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தெல்லிப்பளை மிசன் பாடசாலை வட்டுகோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் கல்வி பயின்றதோடு யாழ்ப்பாண கல்லூரியில் தனது ஆங்கில கல்வியினை பெற்றுக்கொண்டார். தனது 20 வது வயதில் கோப்பாய் ஆசிரியர்  பயிற்சி கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856ம் ஆண்டு இனவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இந்நிலையில் 1856 ம் ஆண்டு இந்தியாவின் சென்னைக்கு சென்று தனது கல்வியினை ஆரம்பித்த தாமோதரனார் 1857 ம் ஆண்டு சென்னை மாநிலக்கல்லூரியில் தமது ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். குறித்த  கல்லூரியில் உ.வே.சாமிநாத ஐயர், சேர். பொன். இராமநாதன்  மற்றும் இலங்கையில் அமைதிக்கா பெரும் பணியாற்றிய ஜி.பார்த்த சாரதி ஆகியோரும் வாழ்ந்த தடங்கள் உள்ளன என்பதும் பெருமைக்குரிய விடயம்.  1871 ம் ஆண்டு தனது 39 வது வயதில் கல்விக்கோட்டை அரசினர் கல்லூரியில் இளங்கலை சட்டம் தொடர்பாக பட்டம் பெற்ற அவர் தனது 50 வது வயதில் அரச பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் 1884 ம் ஆண்டில் சட்டத்துறையில் சிறப்பு பெற்றிருந்த இவருக்கு புதுக்கோட்டை அரசின் முறைமன்றநடுவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் குறித்த பணியிலிருந்து 1890 ம் ஆண்டு ஓய்வு பெற்ற இவருக்கு 1895 ம் ஆண்டு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக அரும்பணியாற்றிய தாமோதரனார் பலநூல்களை எமக்கு தந்தளித்துள்ளார். அதற்கமைய 1854 ம் ஆண்டு நீதிநெறி விளக்கம் 1868 ம் ஆண்டு தொல்சேனாவரையம் 1881 ம் ஆண்டு வீரசோலியம் 1883 ம் ஆண்டு இரையனார் கலவியல் மற்றும் தனிகை புறாணம், 1885ம் ஆண்டு தொல்பொருள் நச்சு நாக்கினியம் 1887 ம் ஆண்டு கலித்தொகை 1889 ம் ஆண்டு இலக்கண விளக்கம் மற்றும் சூளாமணி 1891ம் ஆண்டு தொல் எழுத்து 1892 ம் ஆண்டு தொல் சொல் நச்சு ஆகிய நூல்களை தாமோதரனார் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 1898ம் ஆண்டு அகநாநூற்றை வெளியிட அவர் எடுத்த முயற்சி அவரை வரலாற்றில் இடம்பெறச் செய்ததது. தன்வாழ் நாள் முழவதையும் பதிப்பு துறைக்கு அர்ப்பணித்த தாமோதரனார் ஈழத்தமிழ் தமிழுக்கு தந்த உன்னத படைப்பாளி. மறைந்து போக தயார் நிலையிலிருந்த தமிழ் இலக்கியங்கள் வரலாறு சான்றுகள் என்பவற்றை மீண்டும் காப்பாற்றி எடுத்து இவ்வுலக்கு தந்து தமிழர் பெருமையை உலகம் போற்ற செய்தவர் சீ.வை.தாமோதரம் பிள்ளை. இந்நிலையில் 1832 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ம் திகதி யாழ்ப்பாணம் சிறுபிட்டியில் உதயமாகி சீ.வை.தாமோதரம் பிள்ளை 1901ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் திகதி தமிழகத்தின் தலைநகரான சென்னையிலுள்ள புறசைவாக்கம் எனும் பகுதியில் தனது 69 வது வயதில் இறையடிசேர்ந்தார்.