வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1
Veelvenendru Ninaithaayo-Part 1
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மல்லிகா மணிவண்ணன்
பதிப்பகம் :நாகம்மை நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :396
பதிப்பு :1
Published on :2015
Add to Cartஇது எனது பத்தாவது நாவல் என்பதை மகிழ்ச்சியுடன் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். விளையாட்டு போல ஆரம்பித்தது தான் என்னுடைய எழுத்துப் பணி. உங்கள் எல்லோருடைய ஊக்கமும் உற்சாகமும் மட்டுமே இதை இப்பொழுது என்னை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய வைத்திருக்கிறது. என்னுடைய இந்த எழுத்துப் பணி தொடர உதவிய இருவரை பற்றி நான் நிச்சயம் சொல்ல வேண்டும். ஒருவர் எப்பொழுதும் நான் புத்தகம் வாங்கும் கடையின் உரிமையாளர் திரு A.S.குணசேகர் (ஓம் முருகா புக் ஷாப், சேலம்) அவர்கள். நான் ஒரு கதையை எழுதியிருக்கிறேன். எப்படி பிரசுரிப்பது? யாரை அணுகுவது என்று தெரியவில்லை என்று நான் சொன்னபோது, சற்றும் யோசிக்காமல், நான் எப்படி கதை எழுதுவேன் என்று கூடத் தெரியாமல், என் மேல் நம்பிக்கை வைத்து உடனே நாகம்மை நிலையம் திரு. அருணாசலம் அவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்லி, பேசச் சொன்னார். அடுத்தவர் நாகம்மை நிலையம் திரு அருணாசலம் அவர்கள் ஒரே ஒரு கதை மட்டுமே எழுதியிருந்த நிலையில் என்னுடைய கதையை எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனே பிரசுரித்தார். முதல் புத்தகம் வெளிவந்திராவிட்டால் அடுத்தடுத்து எழுத வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் இருந்திருக்காது.