book

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2

Veelvenendru Ninaithaayo-Paagam 2

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மல்லிகா மணிவண்ணன்
பதிப்பகம் :நாகம்மை நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :428
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

இந்த முறை வீரமணி வருவதற்கு ஒரு வாரத்திற்கும் மேல் ஆக தவித்துப் போனார் தெய்வானை. எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்பது போல ஒரு உந்துதல். என்னவோ சரியில்லாதது போல மனம் அடித்துக் கொண்டது. சக்தியை கவனித்துக் கொண்டே தான் இருந்தார். சிரித்த முகத்துடன் தான் வளைய வந்தாள்... உற்சாக மாகவும் இருந்தாள்... ஆனால் பழைய விளையாட்டுத் தனம் இல்லை... ஒரு பதவிசு வந்திருந்தது நடத் தையில்... தானே எல்லாவற்றையும் முடிவெடுத்து செய்வது ஒரு கம்பீரத்தை கொடுத்தது. இந்தப் புதிய தோற்றம் எல்லோரையும் அவளை மிகவும் மரியாதையாக பார்க்க வைக்கும். அது அன் னைக்கு பிடித்திருந்தாலும் ஆட்டம் பாட்டம் கொண் டாட்டமாய் இருக்கும் சக்தி இல்லையே. விளையாட்டுத் தனம் தானே அவள் இயல்பு. நொடிக்கொரு தரம் அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் அவளின் பேச்சு மிஸ்ஸிங். தெய்வானை வீரமணிக்காக காத்திருந்தார். இங்கே சக்தியும் வீரமணிக்காக காத்திருந்தாள். அவள் கட்டிக் கொண்டிருந்த ஹாஸ்பிடல் வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது.