நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
Nenjukkul Peythidum Mamazhai
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மல்லிகா மணிவண்ணன்
பதிப்பகம் :நாகம்மை நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :412
பதிப்பு :1
Published on :2015
Add to Cartதேவைக்கு அதிகமாக இடம் வீணாக்க அவனுக்கு விருப்பமில்லை. ஒரு சிறு இடம் மிச்சமிருந்தாலும் அதில் என்ன செய்யலாம். ஒரு ரூம் கட்டி வாடகைக்கு விடலாமா இப்படி தான் அவன் யோசனைகள் ஓடும். வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறியவன், அதன் சான்று இப்போது அவன் புதிதாகக் கட்டியிருக்கும் இந்த வீடு. அதே காம் பௌண்டில் அவன் கட்டியிருந்த வீட்டிற்கு சேர்ந்த மாதிரி ஒரு சந்து இருக்க. அதைத் தாண்டி ரோடை பார்த்த மாதிரி ஒரு வீடு. சந்துக்குள் இரண்டு வீடு கள். அதன் மாடி மேல் மூன்று வீடுகள். வாடகைக்கு விட்டிருந்தான். ரோடைப் பார்த்த மாதிரி இருந்த வீடு வேறு காலியாக இருந்தது. இன்று அதற்கு குடித்தனக் காரர்கள் வருவார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அவன் அமர்ந்திருப்பதற்கு எதிரில் வெற்றி வெல்டிங் அண்ட் பெயிண்ட்டிங் ஒர்க்ஸ் என்ற பலகையைத் தாங்கி ஒரு ஷெட்டு. முன்னால் வாகனங்களை நிறுத்துவதற்கு காலி இடம் உள்ளே ஷட்டர் இறக்கி ஒரு கட்டடம் இருந்தது. சற்று பெரிய இடம்.