book

கறுப்புக் குதிரை

Karuppu Kuthirai

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நரேன் ராஜகோபாலன்
பதிப்பகம் :நவி பதிப்பகம்
Publisher :Navi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

கறுப்புப் பணம் என்பது பதுக்கி வைக்கப்பட்ட கரன்சி தாள்கள் மட்டுமே இல்லை. அப்படியென்றால், எது கறுப்புப் பணம்? ரூ 500 மற்றும் ரூ 1000 தாள்களை ஒழிப்பதன் மூலம் கறுப்புப் பணத்தினைக் கட்டுப்படுத்த முடியுமா? ரொக்கமற்றப் பொருளாதாரம் இந்தியாவில் சாத்தியமா? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கானக் கட்டமைப்பு நம்மிடையே இருக்கிறதா? உண்மையான கறுப்புப் பண முறைகள், ஆட்கள், நிறுவனங்கள், வழிகள் பற்றிய உள் இரகசியங்களையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாமான்ய மக்கள் அரசின் மீது வைத்திருந்த மாறாத நம்பிக்கையின் மீதான சம்மட்டியடி என்பதையும், நவீன இந்தியாவின் கனவுகளுக்கும், யதார்த்ததிற்கும் நடுவே சாமான்யர்கள் அரசின் கீழ் பொம்மலாட்ட பொம்மைகளாக மாறி உழன்றுக் கொண்டிருப்பதன் அபத்தத்தையும் நரேன் எளிமையாகவும்,ஆழமாகவும் பொட்டில் அடித்தாற் போல சொல்லி இருக்கிறார். கறுப்புப் பணம், செல்லாக் காசு நடவடிக்கையை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், இரண்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு முடிவெடுக்க முடியாமல் இருப்பவர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய கையேடிது.