book

நான் வளர்கிறேனே மம்மி

Naan Valarkirene Mummy

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஆர். செலின்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :குழந்தைகளுக்காக, வளர்ப்பு, சிந்தனை
Add to Cart

 தாயின் கருவறையில் உருவான நொடியிலிருந்த ஒரு குழந்தையின் வளர்ச்சி மாற்றம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை
விளக்கும் முயற்சிதான் நான் வளர்கிறேனே மம்மி. குழந்தைப் பருவத்தின் முக்கியமான அம்சம் பள்ளிக்கூடம், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகள்  அவற்றை எதிர் கொள்ளும் வழிமுறைகள் என கல்வியோடு வாழ்வியலையும் சேர்த்துப் புகட்ட பெற்றோருக்கு , குறிப்பாக இளம் அம்மாக்கள் மற்றும் அம்மாவாகப் போகும்
சகோதரிகளுக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறேன்.  நம் கைகளுக்குள் அடங்கி விடுமளவிற்கு சின்னஞ்
சிறிதாயிருக்கும் குழந்தை, ஒரு சில மாதங்களிலேயே இரண்டு,மூன்று மடங்கு வளர்ந்து விடுகிறத். எவ்வளவு ஆச்சிரியமான விஷயம் இது. ஆனால் எல்லாக் குழந்தைகளும் இது போன்ற வேகமான வளர்ச்சியை அடைந்துவிடும் என்று சொல்ல முடியாது. வளரும் வேகம் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குக்கூட இந்த வளர்ச்சி விகிதம் மாறுபடும். ஒரு குழந்தை ஒன்பது மாதங்களிலேயே நடக்க ஆரம்பித்து விடலாம். இன்னொரு குழந்தையோ இப்போ என்ன அவசரம் நம் முதல் பிறந்தநாள்  அன்று முதல் அடிஎடுத்து வைக்கலாமே' என்று நிதானமாகக் காத்திருக்கும். எனினும் சராசரியாக ஒரு குழந்தை ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு வளரும் என்ற பொதுவான கணக்கை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.

                                                                                                                                       - சி.ஆர். செலின்.