book

வாழ்க்கையைக் காதலிப்போம்

Vaazhkaiyai kathalipoam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகேந்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2007
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல், முயற்சி
Add to Cart

வாழ்க்கையைக் காதலிப்போம்' -இதன் முழுமையான பொருள் குறித்து உங்களுக்கு விளக்கமே தேவைப்படாது. அது
உங்களுக்குப் புரியும் தெரியும்  என்று உறுதியாக நம்புகிறேன். இந்நூலை நான் எழுதியதும் இதனைப் பதிப்பித்து கற்பகம் புத்தகாலயம் புத்தகமாக வெளியிடுவதும், இப்போது நீங்கள் படிக்கப்  போவதும் கூட வாழ்க்கையை நாம் அனை வரும் விரும்பி நேசிக்கும் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே. வாழ்க்கையை எந்தப் பிழையும் இல்லாமல் காதலிக்கிற அனைவரும், தங்களை மட்டும் அல்ல தங்களைச் சூழுந்துள்ள அனைவரையும் அனைத்தையும் அறிவோம். ஆனால், தங்களையும் வெறுத்து, மற்றவர்களையும்  இகழ்ந்து, அன்பைப் பரிகசித்து,  வாழ்வின்  அர்த்தங்களை மதிக்காதவர்கள்  எல்லாம் வாழ்க்கையைக் காதலிக்கத் தெரியாதவர்கள்  என்பதையும் நீங்கள்  அறிவீர்கள். ரோஜாவின் அழகும், கரும்பின் இனிப்பும், குழந்தையின் சிரிப்பும், இசையின் மயக்கமும், அன்பின் வலிமையும், இனிப்பின் பெருமையும்- இவை போன்ற எண்ண  முடியாத இனியவை அனைத்தும் நமக்குப் புதியவை அல்ல. ஆனால் எல்லாமே மனிதனின் அன்றாடத் தேவைகளாகிவிட்டன. மனதிற்கு மகிழ்ச்சியும் அமைதியும் தரும்  வல்லமை படைத்த இனியவைகளையும்,  அதே சமயம்  அவற்றிக்கு எதிராக  உள்ள மனத்தடைகளையும்  முடிந்தவரை நினைத்துப் பார்க்கும்  சிறிய அளவிலான முயற்சியே இந்நூல்.

                                                                                                                                         அன்புடன் மகேந்திரன்.