காமராஜரும் கண்ணதாசனும்
Kamarajarum Kannadasanum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2007
குறிச்சொற்கள் :காமராஜர், பெருந்தலைவர், கண்ணதாசன், இலக்கிய வேந்தர்
Add to Cartஉண்மைகளுக்காக உடலை வருத்திய போதும், ஊர்துறந்த போதும், உடைமைகள் இழந்த போதும் உண்மையின் சத்தியத்தை உலகுக்கு அறிவித்த அரிச்சந்திரனை உள்வாங்கிய தேசப்பிதாவின் நெறிகளில் தன் நடைப்பாதையை அமைத்து நாட்டின், மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தவர் காமராசர். அவர் தந்த நெறிகளில் தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வரும் தமிழருவி அவர்களின் தணியாத தாகம். மக்கள் தலைவரின் மகத்துவங்களை இந்த மண்ணில் நிலைபெற வைத்திட - வளர்த்திட வேண்டும் என்பது தான். காமராஜ் என்ற தனிமனிதனின் ஜனனம் முதல் மரணம் வரை விரிந்து கிடக்கும் வாழ்க்கை வரலாற்றை விளக்குவது என் நோக்கமன்று. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல் அந்த மகத்தான மனதருக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அரசியல் சாதனை ஒரு பக்கம், தனி மனிதப் பண்புகள் மறுபக்கம். இந்த இரண்டையும் இன்றைய இளைஞனின் இதயத்தில் விதைப்பதுதான் என் இலட்சிய வேட்கை.
-தமிழருவிமணியன்.
சிந்தனையில் செழுமையும், சொல்லில் வண்ணமும், செயலில் உண்மையும் கொண்டு தமிழகத்தின் அரசியல் இலக்கிய மேடைகளில் இனிமை தரும்; நலம் தரும் அருவியென தமிழைப்பொழியும் இலக்கிய வேந்தர் தமிழருவி மணியனின் 'காமராசர்-கவிராசர்' என்ற இந்தப் புத்தகம் ஒரு வரலாற்று இலக்கியப்பதிவேடு.
-பதிப்பகத்தார்