book

மல்டி மீடியா அடிப்படைகள்

Multi Media Adipadaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. ஆண்டோபீட்டர்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :மென்பொருள், கணினி, கணிபொறி, நிறுவனம், கண்டுபிடிப்பு, மல்டி மீடியா
Add to Cart

அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றாகி விட்டது. கணினி, முன்பெல்லாம் மேல்தட்டு மக்களுக்கு, ஆங்கிலம் அறிந்தவர்களுக்கும் மட்டுமே இந்த தொழில்துட்பம் சாத்தியம் என்ற நுலை மாறி நடுத்தர மக்களுக்கும் உற்ற தோழனாகியிருக்கிறான் இந்தக் கணினி. மல்டிமீடியா அடிப்படையில் என்ற இந்த நூலைப் படித்தபின் கணினியின் மற்றொரு வடிவத்தையும்உணர முடிந்தது. உவமைகளையும், உருவகங்களையும் படித்து வியந்த என் போன்ற தமிழ் பற்றாளர்களுக்கு மல்டிமீடியா பெரும் வியப்பைத் தந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மனதில் நினைத்த விஷயங்களைத் திரையில் காட்டக்கூடிய அற்புதமான வாய்ப்பை இந்த மல்டிமீடியா அமைத்து தருகிறது என்பதும், நம் மனசுக்குள் அசைந் தாடிய கனவை, பிறருக்கும் காட்ட முடியும் என்பதும் வியப்பில்லாமல் வேறென்ன?கிராபிக்ஸ் என்றால் ஹாலிவுட் என்ற நிலை மாறி கொட்டாம்பட்டி முதல் குக்கிராமம் வரை தொழிற்வளர்ச்சி பெற்றுள்ளது. வீடியோ கிராபி, கலர்லேப், டிசைனிங்  மையங்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்ஸ், வினையில் டிசைன், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் என ஆயிரக்கணக்கான துடிப்பான வேலைவாய்ப்பைப் பெருக்கியுள்ளது.  பன்னாட்டு எம் என் சி பிரியர்களிடமும் மல்டிமீடியாவிற்கான  வேலைவாய்ப்பு கொட்டிகிடக்கிறது. கனவு காணச் சொல்லி இளைஞர்களை  அழைக்கிறார் குடியரசு தலைவர் அப்துல்கலாம். இந்த
மல்டிமீடியா ஒரு கனவுப் பெட்டியாகவே என் கண்களுக்குத் தெரிகிறது. இளைஞர்களே எடுத்துக்கொள்ளுங்கள படித்துத் தெளியுங்கள வேலை வாய்பைப் பெற்றிடுங்கள்.