கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி?
Kairegai Jathagam Kanippathu Eppadi?
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலிப்பாணிதாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :111
பதிப்பு :4
Published on :2010
குறிச்சொற்கள் :கைரேகை, ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Add to Cartரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திருக்கும் இதைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய வேண்டும். ஒரு கையில் தாமரை இலையைக் கண்டேன். பின் அதை நன்றாக ஆராய்ந்தபோது குடைச் சின்னம் எனப்புரிந்து கொள்ள முடிந்தது. சில கைகளில் ஏணிக்கும், வலைக்கும், தீவுக்கும் , துளிருக்கும், மீனுக்கும், சங்குக்கும் உரிய அடையாளங்களை ஆராயாமல் சொல்ல முடியாது. ஒருவரின் பிறவி அமைப்பை இடதுகை ரேகைகளையும், விரல்களை ஒட்டியும், அவன் தன் முயற்சியில் அமைக்கும் வாழ்வியலை வலதுகை ரேகைகளையும், வரல்களை ஒட்டியும், பார்க்க வேண்டும். சில ரேகை சாஸ்திரிகள் நீங்கள் கையை நீட்டியதுமே சொல்லத் தொடங்கி விடுவார்கள். இத்தனை சகோதரம், அதிலு இத்தனை ஆண், பெண், உருப்படியாக தேர்ந்தது இத்தனை, மனைவி கணவனுக்குள்ள ஒற்றுமை வேற்றுமை, குழந்தைகளின் தன்மை, வெளிநாடு பயணம், தாய்தந்தையர் குணம் போன்றவற்றை உருப்போட்டது போல் சொல்லி விடுவார்கள். அதற்கு மேல் ஆராயமாட்டார்கள் அடுத்த கைக்கு மாறிவிடுவார்கள். அவர்களிடம் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவற்றையே அறிந்து கொண்டீர்கள். அதற்கு மேல் அறியும் வாய்பை இழந்து விடுகிறீர்கள் . அவருக்கு ஆராய்ந்து பார்க்கவும் நேரம் கிடையாது.
-புலிப்பாணிதாசன்.
-புலிப்பாணிதாசன்.