சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.சு. பிரம்மதண்டி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், வாஸ்து சாஸ்திர ரகசியங்கள்
Add to Cartவீட்டைக்கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஆதிகாலம் தொட்டு பெரியோர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறோம். திருமணம் செய்து கொள்வதற்கு நமது ஜாதகத்தின் படி திருமணயோக அமைப்பு இருந்தால் தான் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க முடியும். அதே போல சொந்த வீடு வாங்கவும், அதில் வசிக்கவும் ஜாதகத்தில் யோகம் இருந்தால் மட்டுமே கூடிவரும். வசிக்கும் வீடு ஒழுங்காக அமைந்தால்தானே நாம் வளமோடு வாழ முடியும். அவ்வாறு ஒழுங்காகவும், முறையாகவும் அமைத்துக்கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டது தான் வாஸ்து சாஸ்திரம் எனப்படுகின்ற சிற்ப சாஸ்திரமாகும். நாம் நமது வாழ்க்கையில் பலவிஷயங்களை நம்பிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பஞ்சபூதங்களை நம்புகின்றோம். இயற்கையை நம்புகின்றோம். கிரகங்களின் செயல் சக்தியான ஜோதிடத்தை நம்புகின்றோம். இவ்வளவு ஏன், நாம் ஒருவரை ஒருவர் நம்பி தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வளவு நம்பிக்கையும் நமக்கு எதனால் ஏற்பட்டது. நமது முன்னோர்களான சித்தர்கள் தங்களின் யோக ஞான சக்தியின் வாயிலாகவும், கற்றுணர்ந்தும், செய்முறையாக செய்து பார்த்தும், அதனதன் அபூர்வ சக்திகளை ஏட்டில் எழுதி வைத்துள்ளதை தானே நாம் வழிவழியாக செய்தும் அனுபவித்தும், நம்பியும் வாழ்ந்து வருகின்றோம். அதே போன்ற வழியில் வந்ததுதான் வாஸ்து சாஸ்திரமான சிறப சாஸ்திரக்கலை. நாம் வசிக்கக்கூடிய வீடுமட்டுமல்லாமல், கோயில் , குளம், ரண்மனை மாடமாளிகை, மாட்டுத் தொழுவம், தானியசேமிப்பிடம் போன்ற அனைத்துமே வாஸ்து சாஸ்திர முறைப்படிதான் நம்முன்னோர்களால் நிர்மாணிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
- ம.சு. பிரம்மதண்டி.
- ம.சு. பிரம்மதண்டி.