மறக்க முடியாத மனிதர்கள்
Marakka Mudiyatha Manithargal
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :200
பதிப்பு :7
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, சரித்திரம், தலைவர்கள்
Out of StockAdd to Alert List
அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில் நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.
தியாகம், தன்னல மறுப்பு சேவை மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய உகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் பண்புகளாய் போற்றப்பட்டன.
தம்மிடம் இருப்பதை இழப்பதற்காகவே அன்று அரியல் உலகில் ஒவ்வொருவரும் அடியெடுத்து வைத்தனர். இன்று சகல தளங்களிலும் சமூகத்தைச் சுரண்டிக் கொடுப்பதற்காகவே பல பேர் அரசியல் வேடம் புனைந்து பொய் முகத்துடன் போலித் தலைவர்களாக வலர் வருகின்றனர்.
எல்லா அழுக்குகளையும், அகற்றுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் அமைப்பே இன்று சுத்தப்படுத்த முடியாதபடி அடர்த்தியாய் அழுக்கேறிக் கிடக்கிறது.
சமூக பிரக்ஞை உள்ள இளைஞர்கள் இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருப்பது நம் நாட்டிற்கு நல்லதல்ல. அடிமை இந்தியாவில் ஆயுதம் தேவைப்படிருக்கலாம். சுதந்திர இந்தியாவில் காந்தியவழியில் அறப்போர் மூலம் ஆயிரம் மாற்றங்களை நாம்நினைத்தால் அரங்கேற்ற முடியும். இந்த மேலான உணர்வைத் தூண்டுவதுதான் இந்த நூலின் நோக்கம்.
- தமிழருவி மணியன்