அலாஸ்கா
Alaska
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீதா முருகேசன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :262
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788184762174
குறிச்சொற்கள் :பயணம், வழிகாட்டி, சுற்றுலா, தகவல்கள், பொக்கிஷம்
Add to Cart‘அடடா... வெயில் தாங்கலையே... எங்கேயாவது குளுகுளுன்னு ஒரு இடம் இருந்தா நல்லாயிருக்குமே’ என்று வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகள்! அதில் ஒன்றுதான் குளிர் பிரதேசப் பயணம். குஷிப்படுத்தும் குளிர் பூமிகளில் முதலிடம் அலாஸ்காவுக்கே கொடுக்கலாம்! காரணம், பரவசமூட்டும் பனிச்சூழல்; காணக்கிடைக்காத உயிரினங்கள்; நெஞ்சை அள்ளும் ‘நார்தர்ன் லைட்ஸ்’; பனிச்சறுக்கு; நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்; வித்தியாசமான வாழ்க்கைமுறை என சந்தோஷ சாத்தியக்கூறுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற நாடு அலாஸ்கா. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அலாஸ்கா எப்படியிருந்தது? அங்கு மனிதக் குடியேற்றம் எவ்வாறு ஏற்பட்டது? எஸ்கிமோக்களுக்கும் அலாஸ்காவுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர்களின் வாழ்க்கை முறை என்ன? _ இப்படி துளைத்தெடுக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில், அலாஸ்காவில் தான் பார்த்ததை, கேட்டதை, அனுபவித்ததை சுவைபட எழுதியுள்ளார் நூலாசிரியர் சீதா முருகேசன். இந்த நூலைப் படித்தால், பூமி உருண்டையின் உச்சத்தில், வடதுருவத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் அலாஸ்காவை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், அலாஸ்காவை பூகோள_அறிவியல் ரீதியாக ஆராய்ந்துவரும் அநேகருக்கும் இது ஒரு பொக்கிஷமாக விளங்கும். முக்கியமாக, அலாஸ்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இந்த நூல் மிகச் சிறந்த வழிகாட்டியாக உதவும்!