book

பழந்தமிழர் வாழ்வில் காதல்

Pzhnthamizhr Vaazhvil Kaadhal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. பழநி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

மனித குல வரலாற்றில் வரலாற்றில் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். வரலாற்றறிஞர்கள் பலரும் இதனைத் தத்தமது நூல்களில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். என்றாலும் அது முழுமையானதாக இல்லை என்பதும், அதற்கான தரவுகள் பெருமளவில் இல்லை என்பதும் வருத்தம் தருவதாக உள்ளது. தமிழர்கள் வரலாற்றை படைத்திருக்கிறார்கள். தாம் படைத்த வரலாற்றை எழுதிவைக்காமல் காலத்தின் உராய்வில் அழிந்து போகுமாறு விட்டுவிட்டார்கள். இதனால் ஏற்பட்ட 'வரலாற்று இழப்பு' கொஞ்சநஞ்சம் அன்று. கால இடைவெளி என்னும் கரிய இருள் நமக்கும் திருவள்ளுவர் காலத்திற்கும் - நமக்கும் சங்க காலத்திற்கும் டையில் மண்டிக்கிடக்கின்றது. அந்தக் கரிய இருளை ஊடுருவிப் பார்க்க நாம் கடினமாக முனைகின்ற வேளையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புகழ் ஒளியின் கண் சிமிட்டல்கள் புலப்படவே செய்கின்றன. சங்ககாலம் தமிழர்களின் பொற்காலம் என்பதை உலகம் ஒப்புக்கொள்கின்றது. அக்கால மக்களின் மன்னர்களின் அறிஞர்களின் சான்றோர்களின் வாழ்க்கை பற்றிய தெளிவான வரலாறுகள் கிடைக்கின்றனவா என்று பார்த்தால் பொற்காலம் புரிந்து கொள்ள முடியாத கற்காலமாக மாறிவிடுகின்றது. பகல் இருளாகப் பரிணாமம் பெற்றுவிடுகின்றது. மீண்டும் நாம் தொடர்ந்து முயல்கின்றபோது சில துணுக்குகள் மட்டுமே கிடைக்கின்றது. தோரணங்கள் கிடைப்பதில்லை.