கவனம் தேடும் கடலோரம்
Kavanam Theatum Kataloram
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோ டி குருஸ்
பதிப்பகம் :காக்கை
Publisher :Kaakkai
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2019
Add to Cartகடல் சார்ந்து வாழ்கிற மீனவர்களின் அன்றாடமும் நிலம் சார்ந்து வாழ்கிற மக்களின் அன்றாடமும் முற்றிலும் வேறானது. இந்த வேற்றுமையின் இடைவெளியில் இதுவரையிலும் நாம் பயணித்ததில்லை. அதனால் மீனவர்களின் வலியை, துயரத்தை செய்தியாக வாசித்து நகர்ந்துவிடுகிறோம். கடற்கரை நமக்கு காற்று வாங்குகிற இடம். கடல் நாம் வியந்து பார்க்கிற நீர்வெளி. கடலோடிகளுக்கு கடற்கரையானது வாழ்வு. மீனவனுக்கும் மீன்களுக்கும் உப்பு நீர்தான் உயிர்நீர். தனது பிள்ளைகளுக்காக மடியில் எந்நேரமும் உணவை வைத்துக்கொண்டு காத்திருப்பவள் கடல்மாதா. அந்த அன்னையோடு நெருக்கமாக இருக்கும் அவர்களை நாம் புரிந்து கொள்வதற்கு ஜோ என்ற ஒரு மனிதன் தேவைப்படுகிறான். இனியும் மீனவர்களை ஏமாற்ற முடியாது. இனத்தின் வலியை, துயரத்தை மட்டும் பேசும் மனிதனல்ல ஜோ. பரதவ மக்களின் உரிமையை, கடல்மாதாவின் அன்பை, அள்ள அள்ளக் குறையாத மீன் வளத்தை, கடலின் காலடியில் நீண்டு பரந்து கிடக்கும் மீன்களின் வாழ்வெளிப் பிரதேசத்தை, கடலோடிகளின் அறிவை, இந்தியப் பொருளாதாரத்தை, துறைமுகச் சிக்கல்களை, பெயர்ச்சிமையின் முக்கியத்துவத்தை, பெயர்ச்சிமையில் கடலோரத்தின் பங்களிப்பை, 8118 நீளமுள்ள கடற்கறையில் எங்கு சரக்குத் துறைமுகம் அமைப்பது? எங்கு மீன்பிடித் துறைமுகம் அமைப்பது என்பதான கடலோரப் பொருளாதாரம் உணர்ந்த அக்கறையுள்ள போராளியாகத் தோற்றம் கொள்கிறார் ஜோ.