சொர்க்கத்தில் ஒரு நாள்
Sorkkaththil Oru Naal
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வலம்புரி ஜான்
பதிப்பகம் :நெய்தல்வெளி
Publisher :Neithalveli
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :3
Published on :2019
Out of StockAdd to Alert List
தனக்கென்றே உரிய ஒரு தனித்த எழுத்து நடை வலம்புரிஜானிடம் உண்டு. தொடர்ந்த பயிற்சியின் காரணமாக அந்த எழுத்து நடை அவர் மேடைப்பேச்சுக்கும் இயல்பாகத் தாவிவிட்டது. அடுக்கு மொழி அலங்காரங்களோடு வசீகரமாகச் சொற்பொழிவாற்றக் கூடிய எழுத்தாளராக அவர் புகழ்பெற்றார். அவரது பேச்சாற்றலைப் பார்த்துப் பல தொலைக்காட்சிகள் அவரைப் பேச அழைத்தன. 'அந்தக இரவில் சந்தன மின்னல்' என்பதுபோன்ற அலங்கார வார்த்தைகளையெல்லாம் மிக இயல்பாக மேடையில் கடகடவென்று பேசிக்கொண்டு போகக் கூடியவர் அவர். 'சலங்கைச் சொற்களுடன் வலம் புரிபவன், சங்கத்தமிழுக்கு நலம் புரிபவன்' என்று அவரைப் போற்றுகிறார் கல்யாண்ஜி. அழகழகான தமிழ் வார்த்தைகள் அருவிபோல் அவர் உதடுகளிலிருந்து கொட்டும்,.. கூட்டம் அவரது பேச்சை மலைத்துப் போய்க் கேட்டுக் கொண்டிருக்கும், ஒரு சங்கீதக் கச்சேரி மாதிரி அவரது குரலின் முழக்கமும் அவர் பேச்சின் தோரணையும் கேட்பவர்களைக் கட்டிப்போடும்.