book

இளைய பாரதத்தினாய் வா வா வா

Ilaya Bharathathinai Va Va Va

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ஓங்காரானந்தர்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184762501
குறிச்சொற்கள் :அறநெறிகள், முயற்சி, திட்டம், உழைப்பு, நெறிமுறைகள், வாழ்க்கைமுறை
Out of Stock
Add to Alert List

பாரதத்தை வாழ்த்தி பாரதியார் பாடிய வைர வரிகளை யாரும் மறந்திருக்க முடியாது.  குறிப்பாக 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா!' என்ற பாடல் வரிகள் உத்வேகத்தை ஊட்டுபவை. அந்தப் பாடல் வரிகளில் ஒன்றைத் தலைப்பாகக் கொண்டு, 'சக்தி விகடன்' இதழ்களில் இளைய தலைமுறைக்கு அறநெறிகளை வழங்கி வருகிறார் சுவாமி ஓங்காராநந்தர். அவரது முதல் முப்பது கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

இளைஞர்கள்தான் தேசத்தின் நலம் காக்கும் வருங்காலத் தூண்கள் என்பதை மனதில்வைத்து, நாளைய சமுதாயத்தின் ஆணிவேர்களான இளைஞர்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும்.  அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன என்பவற்றை விளக்கமாகக் கூறியுள்ளார் சுவாமி ஓங்காரநந்தர். திருக்குறள் காட்டும் வாழ்க்கைமுறை, தேவாரப் பாடல்கள், பாரதியாரின் பாடல்கள், பெர்னாட்ஷா போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் கூறிய தத்துவங்கள் என பல விஷயங்களை இந்த நூலில் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த நூல் இளைஞர்களுக்கு மட்டுமல்ல.  அவர்களை வழிநடத்தும் பெற்றோருகளும் ஆசிரியர்களும்கூட படித்து பயன்பெற உதவும் அறிநெறி கூறும் அறிவுநூல்.

-ஆசிரியர்