சித்தர்கள் பலர் வாழும் சிறந்த மலை பர்வதமலை
Siddhargal Palar Vaazhum, Sirandha Malai Parvathamalai
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Out of StockAdd to Alert List
ஒரு நாட்டிற்கு இயற்கை எழிலும்,அரணுமாய் அமைந்திருப்பது மலையே .நிலத்தோற்றத்தில் முதலில் தோன்றியது மலை. மனித வாழ்க்கையின் தொடக்கம் மலை. பர்வதம் என்றால் மலை என்று பொருள் .பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை அதாவது மலைகளுக்கெல்லாம் மன்னன்;என்று பொருள். கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் திருவண்ணாமலைக்கு வந்தபோது ,பர்வத மலையில் ஒரு காலை வைத்து மற்றொரு காலை அருணை மலையில் வைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே பர்வத மலையின் காலம் திருவண்ணாமலையின் காலமாகும். பரவதமலை திருவணணாமலை,மாவட்டத்தில் போளூர் வட்டத்தில் உள்ளது. போளூருக்குத் தென்மேற்கே 20 கி.மீ தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து வடமேற்கே 30 கி .மீ தொலைவிலும் ,செங்கத்திலிருந்து வடகிழக்கே 30 கி.மீ தொலைவிலும் உள்ளது.