வெரைட்டி ஃபாஸ்ட் புட்
variety fast food
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி சண்முகம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :144
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788184760446
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
Out of StockAdd to Alert List
'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்பார்கள். இங்கே என்னவென்றால், ஒரு கவியரசரின் வாரிசு கைமணக்க சமைக்கிறது. ஆம்! கண்ணதாசனின் மகள் ரேவதி சண்முகம் சமையற்கலையில் நிபுணராக ஜொலிக்கிறார்.
கலாசாரமும் பேச்சும் ஊருக்கு ஊர் மாறுபட்டிருந்தது போல், சமையல் திறனிலும் தனித்துத் தெரிந்தார்கள் தமிழக மக்கள். திருநெல்வேலி சமையல், தஞ்சாவூர் சமையல் என்று ஊருக்கு ஊர் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற அறுசுவையிலும் கொஞ்சம் கூட்டிக் குறைத்து வித்தியாசப்படுத்திச் சுவைத்து மகிழ்ந்தார்கள். இதில் செட்டிநாட்டு சமையலுக்குக் கூடுதல் சிறப்பு. அங்கே சைவம், அசைவம் இரண்டுமே நாக்கைச் சப்புக்கொட்ட வைப்பவை. இரண்டிலுமே கைதேர்ந்தவர் ரேவதி சண்முகம்.
'அவள் விகடன் வாசகிகளுக்காக, உங்கள் சமையல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்' என்று இவரிடம் கேட்டோம். வியப்பின் விளிம்புக்குப் போன ரேவதிக்கு இரட்டிப்பு சந்தோஷம்... இருக்காதா பின்னே! 'அவள் விகடன்' முதல் இதழிலிருந்து ஆர்வமாகப் படித்துவரும் வாசகியாம் அவர்!
எல்லோருக்கும் தெரிந்த, எல்லா இடங்களிலும் கிடைக்கிற அயிட்டங்களை வைத்துக்கொண்டு, புதுப்புது ரெஸிபிகளை வாசகியருக்குக் கற்றுக்கொடுத்தார். படித்துப் பார்த்தவர்கள், ஆர்வம் மேலோங்கச் செய்தும் பார்த்து, ரசித்து வாழ்த்தினார்கள்.
வெளிநாடுகளிலும் பிற மாநிலங்களிலும் வசிக்கும் அவள் விகடன் வாசகிகள், 'அவள் விகடன் இதழில் வெளியான சமையல் செய்முறைகளைத் தொகுத்துப் புத்தகமாகப் போடுங்கள்... எங்களுக்கு வசதியாக இருக்கும்' என்று அடிக்கடி கடிதம் எழுதுவதுண்டு. 'முதலில் ரேவதி சண்முகத்தின் சைவ ரெஸிபிகளை ஒரு புத்தகமாகப் போடலாம்' என்ற எண்ணம் எழுந்தது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவள் விகடனில் வெளியான நூற்றுக்கு மேற்பட்ட சுவையான சைவ ரெஸிபிகளைத் தேர்ந்தெடுத்து, அழகான ஒரு வண்ணத் தொகுப்பாக வாசகியருக்கு வழங்குவதில் பெருமையடைகிறேன். ரசித்து சமையுங்கள்... ருசித்து மகிழுங்கள்.