book

காலக் கண்ணாடியில் இலக்கியத்தின் பார்வை

Kaalak Kannaadiyil Ilakiyathin Paarvai

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சு.கு. பன்னீர்செல்வம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :211
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

இலக்கியம் பெரியதா, சமுதாயம் பெரியதா என்றால் சமுதாயம்தான் பெரியது. சமுதாயத்தை விளக்க வந்ததும் விளங்க வைப்பதும் இலக்கியமாகும். நீரில்லாமல் மீன் வாழமுடியாது. ஆனால் மீன் இல்லாமல் நீர் இருக்க முடியும். சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்குமுள்ள தொடர்பை இந்த உவமையால் விளங்கிக்கொள்ள முடியும். இலக்கியத்தின் தரத்தைத் தீர்மானிப்பது இலக்கியத்தின் அகக்கூறுகளே. சமுதாயம் இலக்கியத்தின் அகக்கூறு அன்று; புறக்கூறு. படைப்பாளிக்கும், அவன் வாழும் சமுதாயத்திற்கும், படைப்புக்கும் தொடர்பு இருக்கும் போதுதான் இலக்கியம் உண்மையாகிறது. இலக்கியம் தாமரையாக விளங்கிட, படைப்பாளி தடாகமாக அமைகிறார். சமுதாயம் நீர் சுமர்ந்த நிலமாக திகழ்ந்து சமுதாய நிகழ்வுகிறுக்கும் இலக்கிய படைப்பில் இடம் பெறும் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள நெருக்கம்தான் இலக்கியத்தை உண்மையாக்குகிறது.