நாலடியார் தெளிவுரை
Naaladiyaar Thelivurai
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மீ.பொன். இராமநாதன் செட்டியார்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :236
பதிப்பு :4
Published on :2010
ISBN :9788183795418
Add to Cartஇந்நூல் செய்யப்பட்ட காலம் இன்னதெனத் தெளிவாய்ப் புலப்பட்டிலது. இது சங்கமருவிய நூலெனக் கூறுவது கொண்டு, இதன் காலத்தைக் கடைச்சங்க காலமாகிய இரண்டாம் நூற்றாண்டெனப் பொதுவாய்க் கூறுவதுண்டு. கடைச்சாங்க நூல்களெனத் தெளிவுறத் துணியப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகைகளிற் பயின்ற வாராத சத்தம், சோதிடம் (52), அபராணம் (207), உபகாரம் அபகாரம் (69), தீர்த்தம் (75), கோத்திரம் (242) முதலிய சொற்கள் இந்நூலில் வந்திருத்தலாலும், வரலாற்று ஆராய்ச்சிக்கு உரியதெனக் கருதப்படும் முத்தரையர் (200,296) என்னும் சொல் ஈரிடத்தில் அமைந்திருத்தலாலும். இஃது ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாயிருக்கலாமென ஆராய்ச்சி அறிஞர்கள் கருதுகின்றனர்.