book

இனி எல்லாம் ஜெயமே

Ini ellaam jeyame

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.ஜி. சந்திரமோகன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :107
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788184762037
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
Out of Stock
Add to Alert List

சுயமுன்னேற்ற நூல்கள் தமிழுக்குப் புதியவை அல்ல. 'அவர் இப்படி ஜெயித்தார்... இவர் அப்படி ஜெயித்தார்' என்று அடுத்த நாட்டில் இருக்கிறவர்களையும், அடுத்த மாநிலத்தில் இருப்பவர்களையும் உதாரணமாகக் காட்டி பலரால் எழுதமுடியும். ஆனால், 'நான் ஜெயித்தது இப்படித்தான்!' என்று ஒரு சிலரால் மட்டுமே எழுதமுடியும். அத்தகைய சாதனை படைத்த ஆர்.ஜி.சந்திரமோகன் எழுதியிருக்கும் புத்தகம்தான் 'இனி எல்லாம் ஜெயமே!'

சந்திரமோகனின் எழுத்துக்களில் வெளிப்படுவது புத்தக அறிவு மட்டும் அல்ல... அனுபவங்கள்! வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து தன் உழைப்பால் உயர்ந்திருக்கும் இவரது கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வது இவரது சாதனைகள்!

புத்தகம் படிப்பவர்கள் உற்சாகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் 'மலையைப் புரட்ட முடியும்... வானத்தை வளைக்க முடியும்ஒ என்றெல்லாம் செய்ய முடியாத விஷயங்கள் எதையும் சந்திரமோகன் இந்தப் புத்தகத்தில் சொல்லவில்லை. தான் எதையெல்லாம் சாதித்தாரோ அதை மட்டுமே சொல்லி வாசகர்களை உற்சாகப் படுத்தியிருக்கிறார்.

''தொழிலில் ஜெயிக்க வேண்டுமானால் புத்திசாலித்தனம், துணிச்சல், மனிதர்களை எடைபோடும் திறன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம்... இவை மட்டும் இருந்தால் போதாது. தனிப்பட்ட சுக துக்கங்களை தியாகம் செய்ய வேண்டும். சிந்தனைகள் எல்லாம் தொழில் மீது மட்டுமே படர்ந்திருக்க வேண்டும்...'' _ வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு சந்திரமோகன் கூறும் யோசனைகள் இவை. இவர் எழுதிய உற்சாகமூட்டும் கட்டுரைகள் ஆனந்த விகடனில் வெளிவந்து அனைத்துத் தரப்பு வாசகர்களின் பாராட்டுதல்களை பெற்றது.

இப்போது அந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.