சுந்தர காண்டம்
Sundhara kaandam
₹250₹250 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :243
பதிப்பு :15
Published on :2016
ISBN :9788189780692
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of StockAdd to Alert List
ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான்.
வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா நாம் பட்டுவிட்டோம்' என்று மனதை தேற்றிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட அசாத்திய கஷ்டம் ராமனுக்கு நிவர்த்தியாகத் தொடங்கியது 'சுந்தர காண்ட'த்தில்தான்.
'ராமனின் அனுக்ரஹம் பெற்ற பராக்கிரமசாலி அனுமன், 'கண்டேன் சீதை'யை என்ற உயிர்ச்சொல்லால் ராமனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, அவன் பட்ட கஷ்டங்களையும், அவற்றை எதிர்கொண்டு, எதிர்ப்பு சக்திகளைத் தூள் தூளாக்கி அதன்பின் அடைந்த வெற்றிகளையும் தெரிந்து கொள்ளுங்கள்' என்று மனோதிடம் கூறும் பகுதிதான் சுந்தர காண்டம்.
அவள் விகடனில், 'சுந்தர காண்ட'த்தை இந்திரா சௌந்தர்ராஜன் சிந்தனைச் சிறப்போடு எழுதி வந்ததை வாசகர்கள் படித்து பெரிதும் மகிழ்ந்தார்கள். வாழ்க்கையே இன்று ஒரு தேடல்தான், யுத்தம்தான், வலி மிகுந்த பயணம்தான். சோதனைகளை சுகமாக சமாளிக்க மனோபலமும் தெய்வபலமும் அவசியமாகிறது.
மனித வாழ்வின் மனத்துயரங்களை ஆற்றும் மகத்தான 'சக்தி வாய்ந்த 'சுந்தர காண்டம்' படியுங்கள்... பரவசமடையுங்கள்... மனவலிமை பெறுங்கள்.