book

தெருவாசகம்

Theruvasagam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யுகபாரதி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :91
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189780982
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள்
Out of Stock
Add to Alert List

ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிளிஞ்சல்களைப் போல இன்னும் எழுதப்படாமல் இருக்கிற மனிதர்களைப் பற்றிய பதிவு இது.
நமக்காக கறைகளைத் துடைப்பவர்கள்; நமக்காக சுமைகளைச் சுமப்பவர்கள்; நமக்காக நாற்றத்தைச் சுவாசிப்பவர்கள்தான் இந்தக் கவிதைகளின் நாயகர்கள். தினம்தினம் நாம் தரிசிக்கிற சக மனிதர்கள்தான். ஆனால், ஒரு சிக்னலில் காத்திருக்கிற இடைவெளியில்கூட இவர்களைப் பற்றி நாம் சிந்தித்திருப்போமா என்பது சந்தேகம்.

ஊர் தூங்கிய பிறகு விழித்திருக்கும் நிலவைப் பற்றி எத்தனையோ கவிதைகள்... நிலவோடு சேர்ந்து நித்திரை தொலைக்கும் கூர்க்காவைப் பற்றி யார் யோசித்தோம்? கோயில் வாசலில் மஞ்சள் வெயில் உதிரஉதிர பூத்தொடுக்கும் சிறுமியின் ஏக்கம் தெய்வத்துக்காவது தெரியுமா?

அந்தியின் கடற்கரையில் மணல் வீடுகள் கட்டி விளையாடும் பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு கைப்பிடி சுண்டல் விற்க அல்லாடும் ஏழைச் சிறுவனின் கனவுகளை அலைகள் மட்டுமே அறியும். பரபரப்பான பெருநகரத்தின் சாலை ஓரத்தில் வெட்கம் பிடுங்கித் தின்ன ஒருவன் தருகிற அறுந்த செருப்பை தைத்துத் தருபவரின் துயரை எந்தப் பாதம் அறியும்? பறிக்க ஆளற்று அனுதினம் பூத்து உதிரும் காட்டு அரளிப் பூக்கள் மாதிரி கழிகிறது இவர்களின் காலம்.

பூமியைக் கேட்டு மழை பொழிவதில்லை, பூக்களைக் கேட்டு தேன் சுரப்பதில்லை என்பது மாதிரி கவனிப்பைப் பற்றிய கவலையின்றி கடமையைச் செய்பவர்கள் இவர்கள். யுகபாரதி திரைப்பட பாடலாசிரியராக ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமானவர்தான்.

மண்ணின் ஈரத்தையும் மனசின் வெப்பத்தையும் வார்த்தைகளில் அடைகாக்கிற கவிஞர்.

இந்தக் கவிதைகள் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வடிவம் மரபாக இருந்தாலும், வார்த்தைகளிலும் அர்த்தங்களிலும் புதுமை செய்திருப்பதே இந்தக் கவிதைளின் சிறப்பு.