book

நினைக்கத் தெரிந்த மனமே!...

Ninaikka Therintha Manamae!..

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபஸ்ரீ கிருஷ்ணவேணி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

தொழில் நுட்ப வளர்ச்சியும் இணையதள வளர்ச்சியும் நாம் கனவிலும் காண முடியாதளவிற்கு வளர்ந்திருக்கின்ற இன்றைய நாளில், உலகின் ஒரு மூலையில் இருப்போர் அடுத்த மூலையில் இருப்பவர்களை நேரில் சந்திக்காமலே பேச முடியும், பார்க்க முடியும். சோஷியல் நெட்வொர்க்கின் மூலம் நம்முடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் யாரென்று கூட நமக்கு தெரிந்திருக்க அவசியமில்லை! இந்த வளர்ச்சியால் ஏராளமான நன்மைகள் இருப்பது போலவே தீமைகளும் அதிகம். இது இரு முனை கத்தி போன்றதே! யார் கையில் அந்தக் கத்தி சிக்குகிறதோ, அதைப் பொறுத்தே அதன் நன்மை தீமைகளும். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் நமது நாயகனும் நாயகியும் பயணம் செய்கிறார்கள். எல்லோருக்கும் ராகவனைப் போன்ற நண்பன் அமையமாட்டான்.