book

வெற்றிப் பாதை

Vettri Paathai

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

எதிரே மாபெரும் திரையில் அரவிந்த்சாமி மனீஷாவை பாட்டுப் பாடித் துரத்தினார்.
இருக்கையின் நுனியில் உட்கார்ந்து அதில் லயித்து அப்பாவின் கையை இறுகப் பற்றினாள், ஆர்த்தி. கிணிகிணி என்று மெலிதான சத்தம். “ஊர்மி, பேஜர் ஒலிக்கிறது பார்...'' என்று தியேட்டர் இருட்டில் பரபரத்தான், யுகபாலன்.
“ஆசையைப் பார்'' என்றாள், அவன் மனைவி ஊர்மிளா. “அது யாருடைய பேஜரோ! இந்த மாதிரி நீங்கள் அட்டூழியம் பண்ணுவீர்கள் என்று தெரிந்துதான் பேஜர், செல்போன் இரண்டையும் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தேன்.. ஒழுங்காக சினிமாவைப் பாருங்கள்.''